×

தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மனதை கவரும் ‘டாம் அண்ட் ஜெர்ரி’ பொம்மைகள்

 

ஊட்டி, ஜன.3: நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களையும், கள்ளிச் செடிகள் மற்றும் பெரணி செடிகள் ஆகியவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் இங்குள்ள பெரிய புல் மைதானத்தில் அமர்ந்தும் விளையாடியும் செல்கின்றனர்.

பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் எப்போதும் பூங்காவில் மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் பூங்கா முழுவதிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் தற்போது முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. இந்நிலையில், புத்தாண்டு விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த 10 நாட்களாக ஊட்டிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டும், 2024ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பூங்கா குளம் அருகே டாம் அண்ட் ஜெர்ரி பொம்மைகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மலர்களே இல்லாத நிலையில், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். பலரும் இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

The post தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மனதை கவரும் ‘டாம் அண்ட் ஜெர்ரி’ பொம்மைகள் appeared first on Dinakaran.

Tags : Tom ,Jerry ,Botanic Gardens ,Ooty ,Nilgiri district ,Government Botanical Gardens ,Dinakaran ,
× RELATED தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கம்